Tuesday, March 11, 2008

தொடரும் ஹில்லரியின் - Hilarious- பைத்தியக்காரத்தனங்கள்.


நான் ஏற்கனவே எனது முந்தைய ப்ளாகில் எழுதியிருந்தது போலவே ஹக்கபீ உலகத்துக்கே தெரிந்திருந்த முடிவான "தோல்வியை" தழுவினார். அதேபோல் இப்போது அனைத்து ரிபப்ளிகன் கட்சியினரும் ஒன்றாக இருக்கவேண்டிய நேரம் என்ற பொன்மொழியையும் சொல்லிவிட்டு, தான் சனாதிபதியாக ஆகியிருக்கவேண்டியது மயிரிழையில் தப்பியது என்றும் சொன்னார். தமிழ்படங்களில் கமெடி ட்ராக் தனியாக வருமே அதுபோல சூடான தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் வடிவேலு பாத்திரம் போல இருந்தவர் நல்லபடியாக வீடு போய் சேர்ந்தார்.


சரி தோழி ஹில்லரியின் பக்கம் வருவோம். தோழி ஹில்லரி ஒஹையோவில் 60%/38% என்ற அளவில் வெற்றிபெற்றது அமெரிக்கா முழுவதையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தொலைக்காட்சியில் அரசியல் நிருபர்கள், பலரும் அவருடைய 3:00 இரவு டெலிபோன் விளம்பரம் ஏற்படுத்திய அலை அது என்று கருத்து சொல்கின்றனர். ஆனால் மறுபடுயும் வியோமிங்கில் ஒபாமா அலை அடிக்க ஆரம்பித்து அவர் வெற்றி அடைந்துள்ளார். ஹில்லரி அதற்குள் சனாதிபதியாகவே ஆகிவிட்டது போல பேட்டிகளும் பேச்சுகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளர். அமெரிக்காவே தான் சனாதிபதியாக வருவதையே விரும்புகிறது என்று தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். ஆனால் உண்மை அதுவல்ல.ஓபாமா இதுவரை வெற்றி பெற்ற மாநிலங்களிலும் அதிகவாக்குகள் மற்றும் 130 க்கும் அதிகமான  டெலிகேட்டுகளை பெற்று எப்போதும் முன்னணியில் இருந்துவருகிறார்.
ஹில்லரி வாரத்துக்கு வாரம் அமெரிக்கர்களை சிரிக்கவைப்பதாக சபதம் எடுத்துள்ளார் என்று தோன்றுகிறது. இந்தவாரம் ஒபாமா எனக்கு துணைசனாதிபதியாக இருக்கலாம் என்றி அறிக்கை விட்டுள்ளார். அதற்கு ஒபாமா "திடீரென என்மேல் இப்படி எப்படி நம்பிக்கை வந்தது?" என்று சூடான பதிலடி தந்துள்ளார். அதற்கு ஹில்லரி "ஓபாமா கத்துக்கொள்வார் என்று நம்புகிறேன்" என்று இன்னொரு சிரிப்பு வெடியை கொளுத்தியுள்ளார்.


போன போஸ்டில் சோனது போலவே மெக்கெயின் ஆதரவாளர்கள், "ஒபாமா முஸ்லீம்" என்ற வாதத்தை கையில் எடுத்துள்ளனர். இதை பார்க்கவே சகிக்கவில்லை. மேலும் அல்‍கையிடா ஓபாமா வெற்றிபெற்றால் கொண்டாடுவார்களாம். இனி ஒசாம போட்டொவையும் ஒபாமா போட்டொவையும் ஒன்றாக ஒட்டி ஓபாமாவை வீழ்த்த் நினைத்தலும் ஆச்சரியப்டுவதற்கு இல்லை.

8 comments:

ILA (a) இளா said...

Wht is that 3:00 AM phone call?
Please remove the word verification from comments

Anonymous said...

ஹில்லரிக்கும் ஒபாமாவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

Anonymous said...

ஹில்லரிக்கும் ஒபாமாவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

பூ பிடிக்கும் said...

@ILA(a)இளா

நட்ட நடுராத்திரியில் 3:00 மணிக்கு வொயிட் ஹவுஸில் போன் அடிச்சா யாரு எடுக்கனும்னு நீங்களே யோசிங்கன்னு ஒரு அட் குடுத்தாங்க.

பூ பிடிக்கும் said...

@சரண் & @chummafun

நிறைய பேர் ஒபாமாவை அப்படி நினைக்கலீங்க.

இரண்டாம் சொக்கன்...! said...

இந்த பதிவின் மூலம் நீங்க ஒரு ஒபாமா ஆதரவாளர்னு தெரியுது....

அசத்துங்க....

இந்த வோர்ட் வெரிஃபிகேஷன் எடுத்துரலாமே....

இயற்கை நேசி|Oruni said...

வாங்க வந்து நிறைய எழுதுங்க!

இந்தப் பதிவுக்கு சம்பந்தமான இன்னொரு பதிவு... படிச்சிப் பாருங்க :)

http://thekkikattan.blogspot.com/2008/02/blog-post.html

பூ பிடிக்கும் said...

@இர‌ண்ட‌ம் சொக்க‌ன்.
நான்தான் ஓப‌னா சொல்லிட்டேனே!

@*இஅயற்கை நேசி*
ந‌ன்றிங்க‌ வாசிச்சேன்.