Thursday, January 3, 2008

வணக்கம்.

வணக்கம். என் பெயர் ஜமுனா.நான் இருப்பது அமெரிக்காவில். பிறந்தது தஞ்சாவூர். வளர்ந்தது சென்னை. நான் ரொம்ப நாளாக ப்ளாக் எழுதனும் ஆசைப்பட்டுகிட்டு இருப்பேன். ஆனால் இப்பதான் என்னால் ப்ளாக் ஆரம்பிக்க முடிஞ்சுது. தமிழில் எப்படி டைப் அடிப்பது என்று கொஞம் கொஞமாக தான் கற்றுக்கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்.

9 comments:

மாலன் said...

வாருங்கள்.அதிகம் எழுதாவிட்டாலும் அடிக்கடி எழுதுங்கள். உங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து ஆரம்பித்தால் எழுதுவது எளிதாக இருக்கும். பின்னர் மெல்ல மெல்ல, பொதுவிஷயங்களில் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.விம்ர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். பாராட்டுக்களைக் கண்டு மயங்காதீர்கள்.
அன்புடன்
மாலன்

ஆயில்யன் said...

//உங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து ஆரம்பித்தால் எழுதுவது எளிதாக இருக்கும்.//

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!

பூ பிடிக்கும் said...

நன்றி மாலன். உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறது.

இரண்டாம் சொக்கன்...! said...

வாங்க வாங்க....

நெறய எழுதுங்க....

வாழ்த்துகள்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாங்க!
சொல்ல நினைப்பதை எழுதுங்க...

Unknown said...

தமிழில் எழுதவேண்டும் என்ற உங்களது ஆவலுக்கு வாழ்த்துக்கள்.

தொடருங்கள்..

Radha Sriram said...

//நன்றி மாலன். உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறது.//


என்னங்க ஜமுனா, மாலன் தெரியாதா?? அவர் வந்து உங்களுக்கு பின்னூட்டம் போட்ருக்காரு!! நல்ல இடத்திலிருந்து வந்திருக்கும் பின்னூட்டம்.உற்சாகமா எழுத ஆரம்பியுங்க..:)::) word verification எடுத்திருங்க.:)

பூ பிடிக்கும் said...

@ஆயில்யன் ,
@இரண்டாம் சொக்கன்...!,
@ delphine,
@ யோகன் ,

எல்லாருக்கும் ரொம்ப தேங்ஸ். என் ப்ளாக்க எட்டு பேரு வாசிச்சாங்கன்னா சந்தோஷ்மா இருக்கு.

@Radha Sriram
ராதா, மால‌ன் யாருன்னு கேள்விப‌ட்ட‌தில்லியே. தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்ல‌னும். என் ப்ளாகே அதுதான‌ங்க‌. ச‌ரி, @மால‌ன் ரொம்ப‌ தேங்ஸ், உங்க‌ க‌ம‌ண்ட்தானெ என்னோட‌ முத‌ல் க‌மெண்ட்.
word verification
எடுக்க பார்த்தேன் சரியா பண்ணிருக்கனான்னு தெரில.

Anonymous said...

Malan is the famous journalist.. he's most famous via kumudham / sun tv programs :-)