Friday, March 28, 2008

தமிழ் மென்பொருள்கள் பாஸ்வேர்ட் திருடுகிறதா?


வசந்தம் ரவி என்பவர் தமிழ் மென்பொருள் ஒன்று kestrokes களை திருடி என்று எழுதியுள்ளார். இதில் உண்மைகள் என்ன என்று பார்ப்போம்.

இவ்வாறு keyStrokes களை record செய்யும் மென்பொருட்களை key-logging software என்று சொல்வார்கள். இவை மென்பொருள் துறையில் பல ஆண்டுகளாக இருப்பவைதான். ஆனால், இவை ஹாக்கர்களால் உருவாக்கப்படுபவை. சாதாரண மென்பொருள் எழுது consultants களால் அவ்வளவு எளிதில் எழுத முடியாது. அப்படி எழுதுபவர்களை எந்த கம்பெனியும் தெரிந்தால் சும்மா விட்டுவைக்காது. ஆனால் 2000த்தில் 1000 மாக இருந்த key logging sofwares 2005 இல் 6000 க்கும் மேலாக வளர்ந்துள்ளது என்று cnet கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.

இன்னும் keylogging செய்ய வேண்டுமெனில், முக்கியமாக இந்த மூன்று வகையில் தான் செய்யப்படுகிறது.

The most common methods used to construct keylogging software are as follows:

a system hook which intercepts notification that a key has been pressed (installed using WinAPI SetWindowsHook for messages sent by the window procedure. It is most often written in C);

a cyclical information keyboard request from the keyboard (using WinAPI Get(Async)KeyState or GetKeyboardState – most often written in Visual Basic, sometimes in Borland Delphi);

using a filter driver (requires specialized knowledge and is written in C).

ஆக மென்‍துறையில் இருக்கும் எல்லோரும் windows API ‍ களோடு வேலைசெய்வது இல்லை. இப்ப‌டி எல்லாம் பாஸ்வேர்டுக‌ளை திருடுவார்க‌ளா என்றால் இல்லை என்றே சொல்ல‌த் தோன்றுகிற‌து. ஏனெனில் எல்லோரும் , தமிழில் எழுதும் மென்பொருள் செய்ய‌ C
உப‌யோகிப்பார்க‌ளா என்றால் இல்லை என்றே தோன்றுகிற‌து. தமிழிலே ஹாக்கர் இருக்கும் எண்ணிக்கையும் குறைவு என்றே தோன்றுகிறது.

என்ன‌ செய்ய‌லாம்: த‌மிழ் எழுதும் மென்பொருள் செய்வோர், ஒரு சிறிய குறிப்பை அந்த‌ மென்பொருள் துவ‌க்க‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ருக்கு காட்ட‌லாம். அதாவ‌து "உங்க‌ள் வ‌ங்கிக‌ண‌க்கில் காசில்லை என்ப‌து எங்க‌ளுக்குத் தெரியும். அத‌னால், உங்க‌ள் பாஸ்வேர்டை திருட‌வில்லை " என்று. :-)) அல்லது "உங்கள் பாஸ்வேர்டை நாங்கள் திருடினால் எங்கள் மீது நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் " என்றும் சொல்லலாம்.

பயனர் என்ன செய்யலாம்:

தமிழ் மென்பொருளை நிறுத்திவிட்டு தங்கள் வங்கிக்கு online இல் போகலாம். அல்லது
Anti-keylogging மென்பொருளை வாங்கி நிறுவிக்கொள்ளலாம்.
எனக்கு ஒரு சந்தேகம் . வசந்தம் ரவி Hacker ‍ ஆ

தெரிந்து கொண்ட‌து இந்த‌ க‌ட்டுரையில் இருந்து.


http://www.viruslist.com/en/analysis?pubid=204791931

Thursday, March 27, 2008

மேதகு கணவன் அவர்களுக்கு..


சுவாதிக்கு எப்பவுமே ஆண்கள் திருடர்களும் சுயநலக்காரர்களும்தான். திருமண ஆன முதல் இரண்டுநாட்களுக்கு பெரிதாக நீட்டிமுழக்கி கொன்வர்சேசன் செய்ய வாய்ப்பில்லாமல் போனதோ அல்லது சுவாதி வாயைத் திறந்து பேசினாலே இவனைக்கொண்டு போய் ஐஸ்கிரீம், ரோசாப்பூ , நட்சத்திரங்கள் நிறைந்த‌ ஒரு இன்பத் தீவிலே இறக்கிவிட்டது போலிருந்ததுவோ, ஏதோ ஒன்றுதான் காரணமாக இருந்திருக்கமுடியும். ஆக சுவாதி ஆணின் பேரிலே இப்படி ஒரு 'அடிமாட்டுக்' கருத்து கொண்டிருப்பாள் என்பது உறைத்தபோது ஏதோ ஒன்றை வகையாக செய்து மாட்டிக்கொண்டிருந்தான் காருண்யன். அப்படித்தான் ஒருதரம் 'ஆண்கள் எல்லோரும் சரியான பெர்வெர்ட்ஸ்" என்றாள். முதலில் சும்மா இருந்தவன், அடுத்தமுறை அதேபோல் சொல்லும்போது,

"உங்க அப்பா கூட அப்படித்தானா?" என்றான். பிறகு அதற்கும்சேர்த்து வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டியதுதான். வேறு என்ன நடக்கப்போகிறது?

காருண்ய‌னின் ஆண்க‌ட்சி கொடி ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்த‌து.

"நம்பர் ஒன். எல்லாரும் அப்படி கிடையாது கண்ணா? நம்பர் டூ. எல்லாரும் அப்படி இருந்தால் கூட , அதுக்கும் முழுப்பொறுப்பு அவங்களை சொல்லமுடியாது. சமூகத்துல
ஆணுக்கு செக்ஸ் கிடைக்காமலே இருக்குறதுனால , பெர்வர்ட்ஸ் தவிர வேறு எப்படி உருவாகுவாங்க? பெண்கள் கணுக்காலை காட்டினாலே ஜிவ்வுன்னு இருந்த நாட்கள் எனக்கே இருந்திருக்கு. ஹி ஹி."

"இத இதத்தான் சொன்னேன் சரியான பெர்வெர்ட்ஸ்ன்னு?"

"இதுல என்ன பெவெர்ஷன் இருக்கு? வளர்ர நேரத்துல என்னோட செக்ஸுவல் எனர்ஜி
ரீலீஸ் ஆகுறதுக்கான ஸ்டிமுலேஷன் அப்படி இருந்துச்சு. எல்லோருக்கும் அப்ப‌டித்தான இருக்கும்? பெண்களுக்கும் இருக்கும். என்ன நீங்க வெளில காமிச்சுக்கமாட்டீங்க. அட்லீஸ்ட் ஆண்கள்கிட்டயாவது காமிச்சிக்காம இருக்கணும்னு நினைப்பீங்க?ஒங்களைப்பத்தி தெரியாதா?"

சரி அப்படின்னா ரேப் பண்றவனுக்குகூட இதே நியாய‌த்தை அப்ளை பண்ணுவீங்களா?
சமூகத்துல கிடைக்கலன்னா அதுக்கு பொம்பளைங்கதான் விக்டிம்ஸ் ஆகனுமா?

இல்ல. நான் அப்படி சொல்லலையே. அநியாயமா பழி போடாத.

~~~
"என்னை இப்படி சிடு சிடுன்னு பேசாதே .. ப்ளீஸ் " ஸ் என்று முடிப்பதற்கும் இரண்டு கண்களிலும் திரண்டு நின்ற கண்ணீர்த்துளி விழுவதற்கு காரின் பின்னால் பார்க்கும் கண்ணாடியில் இவன் பார்ப்பதற்கும் நேரம் சரியாக ஒத்துப்போனது.

"நீ எதாவது சின்னதா சொன்னாகூட என்னால் தாங்க முடியல..ஏன்னா ஐ லவ் யோ சோஓஓ.. மச் புரிஞ்சுக்கோ ப்ளீஸ்" என்றவளின் குரல் கன‌த்து போயிருந்தது.

இவனுக்கு பேச நிறைய இருந்தாலும் இப்போது எதை முதலில் பேச ஆரம்பிப்பது என்று ஒரு சந்தேகத்துடன், எதையும் பேசாமலிருப்பது என்ற முடிவுக்கு வந்தான். பிரச்சினை மீன்டும் நினைவுக்கு வந்ததால் வண்டியை ஒரு கையால் ஓட்டுக்கொண்டு தது வலக்கையை தலையிலே லேசாக சொறிந்து கொள்வது போல் வைத்து கொண்டு சும்மா இருந்தான். சும்மா இருப்பது பல நேரங்களில் உதவி இருக்கின்றது.

இந்தியாவிலிருந்து கல்யாணம் முடித்து அமெரிக்காவுக்கு செல்லும் எல்லா பெண்களுக்கும் கனவு இருக்கிறது. கனவு எல்லோருக்கும் இருக்கிறதுதான். ஆனால் இவர்களுக்கு தன் கணவன் எதோ தங்கத்தினாலான காரிலே வைரம் பொறித்த ஆபரணங்களுடன் வந்திறங்குவான் என்பது போலானது. இங்கு வந்ததும்தான் தன் கணவன் நாட்டிலே எல்லோரும் வைத்திருபபதாலும்,
கார் வைத்திருக்க வில்லையென்றால் குளிர்காலத்திலே பால் வாங்கக் கூட நடந்து போக முடியாத நிலை இருப்பதால் ஒரு காரை அவனும் வாங்கி வைத்திருக்கிறான் என்று அறிகிறார்கள். அவனும் பணத்திலே குளிக்கவில்லை சாதாரண தண்ணீரிலே குளிக்கிறான் என்று உண்மையை கவனிக்கிறார்கள். ச‌ரி எப்ப‌டியோ கார் என்று இருக்கிறதே. இந்தியாவில் இருந்திருந்தால் அது கூட‌ இல்லாம‌ல் தானே இருந்திருக்க‌வேண்டும் என்று த‌ன்னை தேற்றிக்கொள்கிறார்க‌ள்.
இது எல்லாத்துக்கும் காரணம் அந்த இங்கிலீஷ்காரன ஒதைக்கனும். அவந்தான காருக்கு ப்ளெசர் கார்ன்னு பேர் வெச்சான். அந்த இழவாலதான மெட்ராசிலே கார் வெச்சிருந்தா ஆண்டைங்களை பார்க்குறதுப் போல பார்க்குறது ஆரம்பமாச்சு.

~~~

"பின்ன ஏன் ரேப் எல்லாம் நடக்குது சொசைட்டியில? அதுக்கும் எதாவது நியாய‌த்த சொல்லுவீங்க சொல்லுங்க கேக்குறன்".
"முதல்ல டென்ஷன் ஆகாம சொல்றத கேளு. ஒரு பொண்ண பாத்து ஒரு ஆணுக்கு ஏற்படுற பாலுணர்ச்சி விவரம் தெரியாத வயசுல இயற்கையான‌துன்னு நினைக்கிறோம்.
அதுக்கப்புறம்தான் அது கூட ஒருவிதத்துல அநாகரிகமானதுங்கறதே தெரிஞ்சுக்குறோம்.
அதுக்காக அப்படி தெரியாதவன் எல்லாம் ரேப் பண்ணுறான் சொல்லமுடியுமா?"

"சரி , உங்க வழிக்கே வர்றன், அப்படின்னா ஏன் அமெரிக்காவுல ரேப் நடக்குது? இங்கதான் டேட்டிங் பண்றாங்க இல்ல?"

"அமெரிக்காவுல எல்லாருக்கு டேட்டிங் வாய்ப்பு இருப்பதில்லை, ஆனா ரேப்புக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்குமான்னு எல்லாம் நாமளே சொல்லிடமுடியாது, இன்னுகொஞ்சம் தெரிஞ்சுகுட்டுத்தான் பேசனும்"

"எவ்வளவு சொன்னாலும் , பொம்பளைங்க அவஸ்த ஆம்பளைங்களுக்கு புரியாதுங்குறது
நீங்க பேசறதுலேர்ந்தே தெரிஞ்சுக்கலாம்"

உணர்ச்சிவசப்படுபவளிடம் அதற்கு மேல் கண்ணீருக்கு பதில் சொல்லவேண்டும் என்று புரிந்து கொண்டவனாய் முழுதாய் சம்மதித்துக்கொண்டே நகர்ந்தான் காருண்யன்.

~~~~



Tuesday, March 11, 2008

தொடரும் ஹில்லரியின் - Hilarious- பைத்தியக்காரத்தனங்கள்.


நான் ஏற்கனவே எனது முந்தைய ப்ளாகில் எழுதியிருந்தது போலவே ஹக்கபீ உலகத்துக்கே தெரிந்திருந்த முடிவான "தோல்வியை" தழுவினார். அதேபோல் இப்போது அனைத்து ரிபப்ளிகன் கட்சியினரும் ஒன்றாக இருக்கவேண்டிய நேரம் என்ற பொன்மொழியையும் சொல்லிவிட்டு, தான் சனாதிபதியாக ஆகியிருக்கவேண்டியது மயிரிழையில் தப்பியது என்றும் சொன்னார். தமிழ்படங்களில் கமெடி ட்ராக் தனியாக வருமே அதுபோல சூடான தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் வடிவேலு பாத்திரம் போல இருந்தவர் நல்லபடியாக வீடு போய் சேர்ந்தார்.


சரி தோழி ஹில்லரியின் பக்கம் வருவோம். தோழி ஹில்லரி ஒஹையோவில் 60%/38% என்ற அளவில் வெற்றிபெற்றது அமெரிக்கா முழுவதையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தொலைக்காட்சியில் அரசியல் நிருபர்கள், பலரும் அவருடைய 3:00 இரவு டெலிபோன் விளம்பரம் ஏற்படுத்திய அலை அது என்று கருத்து சொல்கின்றனர். ஆனால் மறுபடுயும் வியோமிங்கில் ஒபாமா அலை அடிக்க ஆரம்பித்து அவர் வெற்றி அடைந்துள்ளார். ஹில்லரி அதற்குள் சனாதிபதியாகவே ஆகிவிட்டது போல பேட்டிகளும் பேச்சுகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளர். அமெரிக்காவே தான் சனாதிபதியாக வருவதையே விரும்புகிறது என்று தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். ஆனால் உண்மை அதுவல்ல.ஓபாமா இதுவரை வெற்றி பெற்ற மாநிலங்களிலும் அதிகவாக்குகள் மற்றும் 130 க்கும் அதிகமான  டெலிகேட்டுகளை பெற்று எப்போதும் முன்னணியில் இருந்துவருகிறார்.
ஹில்லரி வாரத்துக்கு வாரம் அமெரிக்கர்களை சிரிக்கவைப்பதாக சபதம் எடுத்துள்ளார் என்று தோன்றுகிறது. இந்தவாரம் ஒபாமா எனக்கு துணைசனாதிபதியாக இருக்கலாம் என்றி அறிக்கை விட்டுள்ளார். அதற்கு ஒபாமா "திடீரென என்மேல் இப்படி எப்படி நம்பிக்கை வந்தது?" என்று சூடான பதிலடி தந்துள்ளார். அதற்கு ஹில்லரி "ஓபாமா கத்துக்கொள்வார் என்று நம்புகிறேன்" என்று இன்னொரு சிரிப்பு வெடியை கொளுத்தியுள்ளார்.


போன போஸ்டில் சோனது போலவே மெக்கெயின் ஆதரவாளர்கள், "ஒபாமா முஸ்லீம்" என்ற வாதத்தை கையில் எடுத்துள்ளனர். இதை பார்க்கவே சகிக்கவில்லை. மேலும் அல்‍கையிடா ஓபாமா வெற்றிபெற்றால் கொண்டாடுவார்களாம். இனி ஒசாம போட்டொவையும் ஒபாமா போட்டொவையும் ஒன்றாக ஒட்டி ஓபாமாவை வீழ்த்த் நினைத்தலும் ஆச்சரியப்டுவதற்கு இல்லை.

Thursday, February 21, 2008

ஒபாமா ஹில்லரி - Duo


 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பாதி கறுப்பினத்தவரான ஒபாமா போட்டியிட ஆரம்பித்ததிலிருந்து நடக்கும் கூத்துக்களை கவனிப்பவர்களுக்கு நிச்சயமாய் ஹில்லாரி கிளிண்டனுக்கு ஓட்டு போட மனசே வராது. கிளிண்டன் குடும்பம் நடத்திய நடத்தும் கூத்துக்களை வெள்ளையினவாதமாக பார்க்காமல் வேறு எப்படி பார்ப்பது?

முதலில் ஹில்லரி கிளிண்டனுக்கு போல ஒபாமாவுக்கு வெள்ளைக்காரரர்கள் ஓட்டுப்போடமாட்டார்கள் என்ற வாதத்தை முன்வைத்தனர். ஆனால் ஒபாமாசென்ற எல்லா தேர்தல்பிரச்சாரத்திலும் கணிசமான வெள்ளையினத்தோர் பங்கு பெற்றனர். ஒரு முறை அவருடைய பேச்சைக் கேட்டவுடனேயே அடுத்த முறை அவர் எங்கு பேசினாலும் ஒருவரை கேட்கவைக்கும் அளவுக்கு சுண்டி இழுக்கும் பேச்சாக உள்ளது ஓபாவினது பேச்சு. பிறகு ஒபாவுக்கு ஓட்டுபோடும் வெள்ளை இனத்தவர் கூட எல்லா லிபரல்/டெமாக்ரட்ஸாக இருக்கிறார்களே தவிர கட்சிசாரா சுயநிர்ண இன்டிபென்டன்ட்ஸ் யாருமே ஒபாவுக்கு ஓட்டுபோட வாய்ப்பே இல்லை என்ற வாதத்தை முன்வைத்தனர். ஒஹையோவுக்கு அடுத்து நடந்த ப்ளொரிடாவில் ஹில்லரி "ஆகா ஓகோ" வென ஜெயிக்கப்போவதாக ஜனநாயக கட்சியின் ஹில்லரி பிரிவு அறிவித்த‌து. ஆனால் கடைசியில் ஹில்லரி வென்றது வெறும் 7 சதவீதமோ (?) என்னவோதான். ஆனால் ஓபாமா ஜெயித்த எல்லா இடங்களிலும் ஹில்லரியை துக்கி சாப்பிடும் அளவுக்கு வித்தியாசத்தில் வென்று வந்துள்ளார்.

அடுத்து, ஓபாமா லாபிஸ்டுகளை எதிர்க்கும்விதமாக பேசியதை எடுத்துக்கட்டாக வைத்து அதௌ மறுக்கும் விதமாக, ஒரு பெரிய பணக்காரரிடம் அவர் தன் தேர்தல் பிரச்சரத்துக்கு நித வாங்கியதை வைத்து ஜனநாயகக் கட்சியின் ஹில்லரி பிரிவு கேவலமான கீழ்த்தர அரசியல் செய்து முயற்சித்து பார்த்தது. ஒபாமாவும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார் , ஆனால் இரண்டே நாளில் அந்த நிதியிலிருந்து கணிசமான (நூறாயிரமோ என்னமோ) தொகையை அனாதை இல்லத்துக்கொ அல்லது வேறு ஏதோ சாரிட்டிக்கோ கொடுத்துவிட்டார். அதற்கு அடுத்து டெக்சாஸிலிம், விஸ்கான்ஸினிலும் ஹில்லாரியை அடிக்கவே முடியாது என்று புருடாவிட்டு பார்த்தார்கள். இப்போ அது காத்துல போச்சு.

நியாமாக‌ மெக்கெயின் காட்டிவ‌ந்த‌ (போன‌வார‌ம் வ‌ரைக்கும்) ம‌ரியாதையைக்கூட‌ ஹில்ல‌ரி அணியின‌ர் ஒபாமாவுக்கு த‌ர‌வில்லை. "வெறும் வாய்ச்ச‌வ‌டால்தான் ஓபாவிட‌ம்" என்கிறார் ஹில்ல‌ரி இப்போது. பிர‌ச்சினை அந்த‌ அள‌வுக்கு வாய்ச்ச‌வ‌டால் விடமுடிய‌வில்லை யாராலும் என்ப‌துதான். ஹில்லாரி வாயை யாரு கொழுக்கட்டையால அடைச்சது?

மெக்கெயின் புஷின் லெக‌ஸியை மேற்கொண்டு ந‌ட‌த்த‌ க‌னவு காணுகிறார்(கொஞ்ச‌ங்கூட‌ இவ‌னுங்க‌ளுக்கு சுய‌ மரிய‌தையே கிடை‌யாதா?).  இராக்கில் அத்த‌னை அழிச்சாட்டிய‌ம் ப‌ன்ணிட்டு , இப்போ வெளியே வ‌ந்துட்டா நாம "தோத்துப்போன‌ கண‌க்காகிடும்" அப்படி‌னுறானுங்க‌. போதா‌ததுக்கு ஹ்க்க‌'பீ "இராணுவ‌ம் ஈராக்க‌ விட்டு வெளியே வ‌ந்தா இனி தின‌மும் 9/11 தான் அமெரிக்காவுல‌ ", இந்த‌ பாவிக‌ள் ஈராக்குல‌ ப‌ண்ண‌து எத்த‌னை 9/11க்கு ச‌மமாகும்? ஒரு 5000 இல்ல‌ 10000? இதுல‌ கொடுமை என்ன‌ன்னா, இதையும் கேட்டு ஒட்டு அவ‌னுங்க‌ளுக்கு ஒட்டு போட‌ எப்ப‌டியும் 10% மாக்கானுங்க‌ளாச்சும் இருப்பாங்க‌ன்னுதான் தோணுது.  ஹ‌க்க‌பீய‌ விட்டுத்த‌ள்ளுவோம். க‌டைசியிலே நாம் எல்லாரும் ஒன்னு நாய் வாலிலே புண்ணுன்ட்டு மெக்கேயின் கிட்ட‌ ச‌ர‌ணாக‌தி ஆக‌ப்போற‌ ஆளுதான்.

ஓமாமாவுக்கு வ‌ருவோம். என் நண்ப‌ர் ஒருத்த‌ர் சொன்னார். அவ‌ருக்கு சாத‌ர‌ண‌மாவே க‌றுப்ப‌ருங்கன்னாலே "பேய்ங்க‌" அப்ப‌டிங்குற‌ மாதிரி ரியாக்ட் செய்வாரு.  இவ‌ன் "ஒபாமா ச‌ரியான‌ கில்லாடிதான். அந்தாளு முஸ்லீம்ங்குற‌தால‌தான் ஈராக் போரை அப்ப‌யே எதிர்த்து இருக்கான் போல‌ருக்கு". "கொஞ்ச‌மாவ‌து பொற‌ந்த‌ குண‌ம்(முஸ்லீம்) இருக்காதா என்ன‌?" அப்ப‌டிங்குறார். இன்னும் இந்த‌மாதிரி வாத‌ங்க‌ள் மெக்கேயின் கிட்ட‌ இருந்தோ , ஹிஹி ஹில்ல‌ரி கிட்ட‌ இருந்தோ வ‌ந்தா ஆச்சிரிய‌ப்ப‌ட‌முடியாது. ஆக‌ ந‌ம்மாளு இந்தியாகாரைங்க‌ க‌றுப்ப‌னு(ரு)க்கு போய் ஓட்டு போடுவாங்களா? ப‌த்து ச‌த‌வீத‌ம் போட்டா அதிக‌ம். இதையே அந்தாளு க‌ண‌க்குல‌ வைச்சிகிட்டு இந்திய‌ இம்மிகிரேஷ‌ன‌ குழுயில‌ புதைச்சாலும் புதைக்க‌லாம். என‌க்கு அப்டித் தோண‌ல‌.

அடுத்து என்னாதான் ப்ரைமரில ஓட்டு வாங்குனாலு டெலிகேட் கணக்கு ஹில்லாரியவிட கம்மிதான. அப்படின்னா டெலிகேட்ஸ் எல்லாரும் ஹில்லரியதான் தேர்ந்தெடுப்பாங்கன்னு ஒரு புருடா விட்டாய்ங்க. இப்போ அந்த கனவுலயும் மண்ண போட்டுட்டாரு பராக் ஹுசனி ஒபாமா. பாத்துகிட்டே இருங்க, அடுத்தது இவ்வளவு படிச்சாலும், இவ்வளவு பேசுனாலும் ஓபாமா கறுப்பாதானே இருக்காருன்னு சொல்லப்போறாங்க.

நம்ம ஓட்டு ஒபாவுக்கே!

 


 

Tuesday, January 15, 2008

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

எங்கும் மங்கலம் பொங்கும்
இனிய திங்கள் தையாம்

வெங்கைக் கதிரோன் இனி
வாழ்த்தி வழகுவான் வையமெலாம்

பொங்கல் களிப்போம்
பொங்கல் களிப்போம்

Thursday, January 3, 2008

பந்தா நாயகி.

 

என் ப்ரெண்ட் ஒருத்தி இருக்கிறால். அவள் சில நேரங்களில் பேசுவது எரிச்சலாக இருக்கும். நான் திருப்பி என்ன சொல்வது என்று வேறு எனக்கு குழம்பி விடும். உதாரணமாக, அவள் ஜெர்ஸியில் எங்கேயோ ஸ்கியிங் போயிட்ட்டு வ்ந்தாள். அன்றுதான்
அவளுக்கு முதல் நாள் , ஆனால் திரும்பி வந்த வந்தவளை ஒரு பேச்சுக்கு , எப்படிடி  இருந்தது ஸ்கி என்று கேட்டேன். உடனே ஆரம்பித்தாளே. ஒரு முறை தவறி விழவே இல்லையாம், யாராவது முதல் நாள் விழாமல் ஸ்கி கத்துக்க முடியுமா? அடக்கடவுளே ஏந்தான் கேட்டேனோ என்று ஆகிவிட்டது எனக்கு. பேசாமல் அவளை பந்தா நாயகி ந்னே பேர் வச்சு கூப்பிடலாமா ந்னு தோணிட்டு எனக்கு.

இதுவாவது பரவாயில்லை. இன்னொரு முறை ப்ரகன்ன்டா  இருக்கிற என் தோழி ஒருத்திக்கு நர்சிங் படிச்ச இவ கைனகாலஜில  எம் டி பண்ண மாதிரி அட்வைஸ் குட்த்தா. கேட்டுக்குட்டு இருந்த ப்ரென்ட்ஸ் எல்லாருக்கும் என்ன செய்றதுன்னே தெரியலை.
வந்த கோவத்துக்கு ஏதாவது கெட்டவார்த்தை சொல்லிடுவோமான்னு கூட யோசிச்சேன் நான்.


இந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது ப்ரென்ட்ஸ் இருக்காங்களா? :-)

வணக்கம்.

வணக்கம். என் பெயர் ஜமுனா.நான் இருப்பது அமெரிக்காவில். பிறந்தது தஞ்சாவூர். வளர்ந்தது சென்னை. நான் ரொம்ப நாளாக ப்ளாக் எழுதனும் ஆசைப்பட்டுகிட்டு இருப்பேன். ஆனால் இப்பதான் என்னால் ப்ளாக் ஆரம்பிக்க முடிஞ்சுது. தமிழில் எப்படி டைப் அடிப்பது என்று கொஞம் கொஞமாக தான் கற்றுக்கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்.