Thursday, January 3, 2008

பந்தா நாயகி.

 

என் ப்ரெண்ட் ஒருத்தி இருக்கிறால். அவள் சில நேரங்களில் பேசுவது எரிச்சலாக இருக்கும். நான் திருப்பி என்ன சொல்வது என்று வேறு எனக்கு குழம்பி விடும். உதாரணமாக, அவள் ஜெர்ஸியில் எங்கேயோ ஸ்கியிங் போயிட்ட்டு வ்ந்தாள். அன்றுதான்
அவளுக்கு முதல் நாள் , ஆனால் திரும்பி வந்த வந்தவளை ஒரு பேச்சுக்கு , எப்படிடி  இருந்தது ஸ்கி என்று கேட்டேன். உடனே ஆரம்பித்தாளே. ஒரு முறை தவறி விழவே இல்லையாம், யாராவது முதல் நாள் விழாமல் ஸ்கி கத்துக்க முடியுமா? அடக்கடவுளே ஏந்தான் கேட்டேனோ என்று ஆகிவிட்டது எனக்கு. பேசாமல் அவளை பந்தா நாயகி ந்னே பேர் வச்சு கூப்பிடலாமா ந்னு தோணிட்டு எனக்கு.

இதுவாவது பரவாயில்லை. இன்னொரு முறை ப்ரகன்ன்டா  இருக்கிற என் தோழி ஒருத்திக்கு நர்சிங் படிச்ச இவ கைனகாலஜில  எம் டி பண்ண மாதிரி அட்வைஸ் குட்த்தா. கேட்டுக்குட்டு இருந்த ப்ரென்ட்ஸ் எல்லாருக்கும் என்ன செய்றதுன்னே தெரியலை.
வந்த கோவத்துக்கு ஏதாவது கெட்டவார்த்தை சொல்லிடுவோமான்னு கூட யோசிச்சேன் நான்.


இந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது ப்ரென்ட்ஸ் இருக்காங்களா? :-)

3 comments:

யாத்ரீகன் said...

:-))))) எல்லா Gang-லையும் இப்படிப்பட்ட ஆளுங்க இல்லாம எப்படி பொழுது போகும் ?

Aruna said...

அடடா!! just missed!!!
ஒரு பதிவு போடற அளவுக்கு என்கிட்ட இது மாதிரி நட்பும் மேட்டரும் இருக்குங்க!

//யாத்திரீகன் said...
:-))))) எல்லா Gang-லையும் இப்படிப்பட்ட ஆளுங்க இல்லாம எப்படி பொழுது போகும் ?//

ரொம்ப சரியாச் சொன்னீங்க யாத்ரீகன்! அப்புறம் யாரை கலாய்க்கிறது????
அன்புடன் அருணா

நானானி said...

சரியாகச் சொன்னார் யாத்திரீகன்!!
என் உறவுப் பெண்மணி, வாக்கிங் போகும் போது சந்திப்பேன். உடனே கூடவே வாக் வருவாள். எனக்கு வாக்கிங் போகும் போது பேசுவது பிடிக்காது. ஆனால் அவள் தொணதொணவென்று சுயபுராணம் பாடிக்கொண்டே வருவாள். நொந்துடுவேன்.